செவ்வாய், 19 செப்டம்பர், 2017

நவராத்திரி விரதம் 21 இல் ஆரம்பம் - இந்து கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் விளக்­க­ம்


அமா­வாசை சேர்ந்த பிர­தமை தின­மான 20 ஆம் திகதி புதன்­கி­ழமை நவ­ராத்­திரி விர­தத்தை ஆரம்­பிக்க முடி­யாது. 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை திருக்­க­ணித பஞ்­சாங்­கப்­படி மு.ப. 10.35 வரையும் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி மு.ப. 11.02 வரையும் பிர­தமை திதியில் அதா­வது ஆஸ்­வி­ஜ­சுத்தப் பிர­தமை உள்­ளதால் 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மையே கும்­பஸ்­தா­பனம் செய்து நவ­ராத்­திரி விர­தத்தை ஆரம்­பிக்க முடியும் என இந்து கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் விளக்­க­ம­ளித்­துள்­ளது.

இவ்­வி­டயம் தொடர்­பாக திணைக்­களம் உரிய தரப்­பி­னர்­க­ளது ஆலோ­ச­னை­களை பெற்­றுக்­கொண்டு பின்­வரும் விப­ரங்­களை மக்­க­ளுக்கு அறி­விப்­ப­தாக திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அ. உமா­ம­கேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,இவ்­வ­ருட நவ­ராத்­திரி விரதம் ஆரம்­பிக்கும் தினம் தொடர்­பாக வாக்­கிய பஞ்­சாங்கம் மற்றும் திருக்­க­ணித பஞ்­சாங்கம் என்­பவை முறையே 20.09.2017 புதன்கிழமை மற்றும் 21.09.2017 வியா­ழக்­கி­ழமை என இரு­வேறு தினங்­களை குறிப்­பிட்­டுள்­ள­தனால் இந்து மக்கள் மத்­தியில் நவ­ராத்­திரி ஆரம்­பிக்கும் தினம் தொடர்­பாக குழப்ப நிலை உரு­வா­கி­யுள்­ளது.

நவ­ராத்­திரி விரதம் ஆரம்­பிப்­பதை நிர்­ண­யிக்கும் பிர­மா­ணங்­களை ஆராயும் போது சாந்­தி­ர­மாத ஆஸ்­விஜ சுத்­த­பி­ர­த­மை­யன்று நவ­ராத்­ திரி விரதம் ஆரம்­பிக்க வேண்டும். இதன் பிர­காரம் அமா­வாசை சேராத பிர­த­மையில் நவ­ராத்­திரி விரதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­ வேண்டும். அமா­வாசை சேர்ந்த பிர­த­மையில் கும்­பஸ்­தா­பனம் செய்தல் விலக்­களிக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­துடன் கும்­பஸ்­தா­பனம் காலையில் செய்தல் வேண்டும் என நவ­ராத்­திரி பூஜா பத்­த­தையில் (சுப்­பி­ர­ம­ணிய சாஸ்­தி­ரிகள்) குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இதன் பிர­காரம் 20 ஆம் திகதி புதன்­கி­ழமை அமாவா­சை­யா­னது திருக்­க­ணித பங்­சாங்­கப்­படி மு.ப.10.59 வரையும் வாக்­கிய பங்­சாங்­கப்­படி மு.ப.11.23 வரையும் உள்­ளதால் அன்­றைய தினம் அமா­வாசை சேர்ந்த பிர­த­மையில் நவ­ராத்­திரி விர­தத்தை ஆரம்­பிக்க முடி­யாது. மேலும் 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை திருக்­க­ணித பஞ்­சாங்­கப்­படி மு.ப 10.35 வரையும் வாக்கிய பஞ்சாங்கப்படி மு.ப. 11.02 வரையும் பிரதமை திதியில் அதாவது ஆஸ்விஜசுத்தப் பிரதமை உள்ளதால் 21 ஆம் திகதி வியாழக்கிழமையே கும்பஸ்தாபனம் செய்து நவராத்திரி விரதத்தை ஆரம்பிக்க முடியுடிம்.


Share:

திங்கள், 18 செப்டம்பர், 2017

மட்டக்களப்பில் பத்தாயிரம் பனைமரம் விதைப்பு

(சி.தணிகசீலன்)
யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கையில் மனித உயிர்கள் மாத்திரமல்லாமல் வடகிழக்கின் தாயகப் பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகக் கருதப்படும் பல மில்லியன் பனைமரங்கள் (கற்பக விருட்சம்) அழிக்கப்பட்டுள்ளன.


Share:

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசாலையின் சிறுவர் பொதுச்சந்தை


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிகுட்பட்ட தேற்றாத்தீவு தரிசனம் பாலர் பாடசாலையின் ஏற்றபாட்டில் இடம் பெற்ற தரிசனம் சிறுவர் பொதுச்சந்தையும், தரிசனம் பாலர் பாடசாலையின ஆங்கில ஆசிரியர் இரா.திருஞானசம்பந்தரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(17.09.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பாலர் பாடசாலை வளாகத்திற்கு அருகில் பாலர்பாடசாலையின் பெற்றோர் சங்கத்தின் தலைவர் ந.துரைராஜ் தலைமையில் இடம் பெற்றது.
Share:

புதன், 13 செப்டம்பர், 2017

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய வருடாந்த கிருஷ்ண ஜெயந்தி பெருவிழா

(சரன்)
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய வருடாந்த கிருஷ்ண ஜெயந்தி பெருவிழாவாது நேற்று(12.09.2017) செவ்வாய்கிழமை இளையதம்பி மாணிக்கப்பிள்ளை குடும்பத்தினரின் உபயத்தில் மிகச்சிறப்பாக கோலாகல உறியடி திருவிழாவாக இடம்பெற்றது.

மேள வாத்தியங்கள் இசைக்க பக்தர்களின் கிருஷ்ண கான இசையுடனும் '"கோவிந்தா கோவிந்தா"" என்று எம் பெருமானை அழைத்து வழிபட்ட காட்சியும் கிருஷ்ணர் கம்பீரத்தோற்றத்துடன் வீதி உலா வந்ததும் சிறப்பாக இடம் பெற்றமையும் குறிப்பிடதக்கவிடயம் இவ் உற்ச்சவ நிகழ்வுகள் சிவஸ்ரீ.ச.மயூரவதன குருக்கள் தலமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது..Share:

வியாழன், 7 செப்டம்பர், 2017

மட்டக்களப்பு கிராமப் புறங்களில் அறநெறி பாடசாலைகள் ஆரம்பித்து வைப்பு..

பல தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிடையே, குறிப்பாக தமிழ் இந்துக்களின் அறநெறிப்பண்பாடு பலவழிகளிலும் சிதைவடைந்து வந்துள்ளது. இலங்கையில் கிழக்குப்பகுதியில் பல புராதன பெருமைமிக்க இந்துநாகரிகத்துக்கு சொந்தக்காரரான தமிழர்கள் அசைக்கமுடியாத நல்ல விழிமியங்களை அவர்களது மரபுகளில், பண்பாட்டில், ஏட்டில் புதைத்து அதற்கொழுகவே வாழ்க்கை முறையினை அமைத்து மற்றவரும் பெருமைகொள்ளும் வகையில் வாழ்ந்து வந்தனர். பாடசாலைகளிற்கு செல்லாதவர்களும், ஆலயங்கள், கலைகள் மற்றும் பெரியவர்களின் வாய்வழி அறப்பரப்பலிற்கு ஆட்பட்டு நல்ல வழியில் வாழலாயினர். ஆனால் இன்று அவை மறைந்து கொண்டு வருவதனைக் காணலாம்
Share:

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

சித்தாண்டி சித்திர வேலாயுதர் ஆலயத்தின் மயில்கட்டு விசேட திருவிழா

வரலாற்று புகழ் பெற்ற ஆலயங்களுள் சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் மகோற்சவ கந்தனின் பெருவிழாவின் நேற்றைய தின விசேட மயில் கட்டுத் திருவிழா மிகவும் பக்தி பூர்வமாக ஆலயத்தில் இடம்பெற்றது.
Share:

திங்கள், 4 செப்டம்பர், 2017

மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பைகொட்டுவதற்கான இடைக்கால தடையை நீக்குமாறு மனு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் திண்மக்கழிவுகள்,குப்பைகள்,மனிதக்கழிவுகள் கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை நீக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Share:

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

களுவாஞ்சிகுடியில் மனோகணேசன் -நடமாடும் சேவையிலும் பங்கேற்பு

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள்  அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
Share:

ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச்சவத்தின் 5ம் நாள் திருவிழா

ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச்சவத்தின் 5ம் நாள் திருவிழா(01.09.2017) கவுத்தன் குடி மக்களினால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
Share:

சனி, 2 செப்டம்பர், 2017

குருபெயர்ச்சி ஹோமம் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்

நிகழும் மங்களகரமான ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 14 நாள் சனிக்கிழமை 02.09.2017 அன்று பகல் 10.48  குரு பகவான் கன்னி இராசியில்இருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர்கிறார். .இதனை முன்னிட்டு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திலுள்ள நவக்கிரக ஆலயத்தில் விசேட குருபெயர்ச்சி   ஹோமம் இடம் பெற்றது.
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Follow by Email

Translate